மதத்தை உருவாக்கி !
மனிதரை சாமியாக்கி !
மனிதனை அழிக்க துடிக்கும் மனிதா !
மலர வேண்டியது
மதம் அல்ல, மனிதம் !
நாத்திகம் என்னும் சாதி உருவாக்கி !
சாக்ரடீசை சாமியாக்கி !
சாமியை அழிக்க துடிக்கும் மனிதா !
அழிய வேண்டியது
ஆத்திகம் அல்ல, ஆதிக்கம் !